Wednesday, January 5, 2011

நீ வருவாய் என..












யாரோ வந்தனர்
யாரோ சென்றனர்
கடல் அலையை விட
கூட்டம் கூட்டமாய் மக்கள் அலை;

உயிரற்றோரின்
உடல்களை பெறவும்,
உயிருள்ளோருக்கு
உடைகளை
தரவும்;

உண்மையான பரிவுடன்
சிலரே சிலரும்,
உன்மத்த மனதுடன்
உயிர் கொண்ட ஜடங்கள் பலரும்;

பிச்சை அளிப்பதில் கூட
பெருமிதம் கொள்வோரும்;
பிரித்து கொடுப்பதை கூட
புகைப்படம் எடுப்போரும்;

எல்லாரும் வருகிறார்கள்
ஏதேதோ தருகிறார்கள்;

எத்தனை பேர் வந்தாலும்
என் கண்கள் மட்டும் உன்னை தேடி..
பசி ஆற்ற பலர் வரினும்
பாசத்தோடு ஊட்ட நீ தானே வேணும்!

என் பட்டினி
பொறுக்காத
பத்தினி நீ;

நம்பிக்கையுடன் நாளையும்
காத்திருப்பேன் பசியோடு!
பரிவுடன் என் பசி தீர்க்க
அம்மா நீ வருவாய் என...

No comments:

Post a Comment