Wednesday, December 29, 2010

காதலாகி...

எது சரி
எது தவறு
என்பதல்ல
நமது இந்த
பிணைப்பின் பிரச்சினை;

என்னை நீயும்
உன்னை நானும்
புரிந்து கொண்டோம்
அதனால் நம் வாழ்வை
இந்த உலகத்தினிடம்  இருந்து
பிரித்து கொண்டோம்

நமக்கு நாமாக
நமக்குள் நாமாக
வாழ முற்படுகையில்
நம் வாழ்வில் தான்
எவ்வளவு  முற் படுகைகள்!!

இத்தனை தடைகளை
தாண்டி சேர்ந்த போது
நீயும் நீயாக இல்லை
நானும் நானாக இல்லை
நம் சுயத்தினை இழந்து
என்ன சுகத்தினை அடைய பாடுபடுகிறோம்?

இனியவனே மீண்டும்
இந்த உலகத்திடம்
அடைக்கலம் கொள்வோம்
வலிகளுடன் அமையும்
நம் வாழ்கையை விட;
வாழ்க்கையோடு அமையும்
வலிகளை எதிர் கொள்வோம்!

என்றேனும் நீயும்
நானும் சந்திக்கும் வரையிலும்
எதையேனும் நீயும்
நானும் சாதிக்கும் வரையிலும்
என் உயிராக நீயும்
உன் ஆன்மாவாக நானும்
கூடு விட்டு கூடு பாய்வோம்

கூடலில் மட்டுமே நம்
காதல் வாழாது
பிரிதலில் தான்
அது பேராண்மையாக
பிறக்கும்;
பின் சிறக்கும்!!

இன்று நம்மை கண்டு
கை தட்டி சிரித்த இவ்வுலகம்
அன்று நம்மையும்
நம் காதலையும்
தலையில் தூக்கி சுமக்கும்...

No comments:

Post a Comment