Thursday, December 30, 2010

என்றும் இனிய சுஜாதா

என்றும் இனிய சுஜாதா,
உங்கள்  வாசகி
ஆகும் முன்பும்  நான்  வாசித்தேன் ..
எனினும்  உங்கள்  வார்த்தைகளில்
நான்  சுவாசித்தேன்!!
உங்கள்  எழுத்துக்கள் 
உண்மையின் விஸ்வரூபம்
உயிரின்  ஊற்றினை 
தோண்ட  தூண்டும்
வசிய  மந்திரம்
மரணம்  என்பது
மனிதர்களுக்கு!
மகான்களுக்கு அல்ல;
நீங்கள் எழுத்துலகின் மகான்,
மகான்கள்  மறைகிறார்கள்; 
மனிதர்கள்  மனங்களில்  நிறைகிறார்கள்..
உங்கள்  உடலை  பார்க்கும்
பாக்கியம்  கிடைக்கவில்லை ..
அதுவும்  நல்லதிற்கே ..
இப்போது உங்களை  நினைத்தாலும்
நினைவிற்கு  வருவது ..
உயிரோடு புன்னகைத்த  முகம் ..
உறைந்த  புன்னகை  முகமல்ல ..
உங்களை  நினைத்து 
அழுத  பொழுது
ஆன்மா  நிறைந்தது ..
ஆத்ம  திருப்தியுடன்
அழுத  பொழுது
அழுகையும்  இனித்தது ..
உங்களை  போலவே ..

No comments:

Post a Comment